×

மைக்கில் ‘பீப்’ வார்த்தை பேசிய தாண்டிக்குடி எஸ்ஐ சஸ்பெண்ட்

கொடைக்கானல்: கொடைக்கானலில் மைக்கில் ஆபாச வார்த்தைகளை பேசிய எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ மகாராஜன் (50). இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது மைக்கில் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போலீசாருக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றி தரக்குறைவான முறையில், கெட்ட வார்த்தைகளை பேசி உள்ளார். ஓபன் மைக்கில் இவர் பேசியது மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கும் சென்றது. இதையடுத்து திண்டுக்கல் எஸ்பி சக்திவேல், எஸ்ஐ மகாராஜனை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

கொடைக்கானல், மேல்மலை மன்னவனூர் அருகே கும்பூரில் நேற்று முன்தினம் தேர்தல் பாதுகாப்பு பணியில், விருவீடு போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ்காரர் ஜான்சன் (50) ஈடுபட்டிருந்தார். இந்த வாக்குச்சாவடியில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஆனால் ஜான்சன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், போதையில் வாக்குச்சாவடியின் ஓரத்தில் படுத்து தூங்கி உள்ளார். போலீஸ் உயரதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ஜான்சன் போதையில் இருந்து தெரிந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Thandikudi SI , In the mic, who spoke , word beep, tandikkudi si, suspend
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...